முகநூல் மூலம் காதலித்து லாரி டிரைவரை மணந்த பட்டதாரி பெண்


முகநூல் மூலம் காதலித்து லாரி டிரைவரை மணந்த பட்டதாரி பெண்
x
தினத்தந்தி 26 May 2023 1:46 AM IST (Updated: 26 May 2023 1:25 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

தலைவாசல்

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வீரகனூர் சொக்கனூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28), ரிக் வண்டி டிரைவர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா அசூர் கிராமத்தை சேர்ந்தவர் வினிதா (22). இவர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இருவருக்கும் முகநூல் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக காதல் மலர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் வினிதாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டத்தி்ற்கு வந்தார். பின்னர் தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணி சாமி கோவிலுக்கு சென்ற வினிதாவும், ெவங்கடேசனும் நேற்று அதிகாலை 5 மணிக்கு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பு கேட்டு வீரகனூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், இருதரப்பு பெற்றோரிடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story