பட்டதாரி இளைஞர் மாட்டுவண்டி பயணம்


பட்டதாரி இளைஞர் மாட்டுவண்டி பயணம்
x

பட்டதாரி இளைஞர் மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டார்.

விருதுநகர்


சேலம் மாவட்டம் சங்ககிரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சூரியன் (வயது 35). பட்டதாரி இளைஞரான இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்த நிலையில் படிப்புக்கேற்ற வேலை தேடாமல் இளைஞர்களிடையே விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க வலியுறுத்தியும், நாட்டு மாடுகள் அழிந்து வரும் நிலையில் விளைநிலத்தில் இயற்கை உரமிடுதலை வலியுறுத்தியும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மாட்டுவண்டி பயணத்தை மேற்கொண்டுள்ளார். தினசரி 10 முதல் 12 கி.மீ. தூரத்தை கடக்கும் இவர் தனது பயணத்தை நிறைவு செய்ய குறைந்தபட்சம் 8 மாதங்கள் ஆகுமென தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இளைஞர்களை வேலையில் இருந்து விரட்டும் நிலையில் அவர்கள் விவசாயத்தின் பக்கம் திரும்பி பார்க்க வேண்டும் என்பதே தனது பயணத்தின் நோக்கம். மனிதனுக்கான உணவினை விவசாயிகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story