கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி


கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி
x

விபீஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்


ராமேசுவரம்,

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் 2-வது நாளில் கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பட்டாபிஷேகம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று விபீஷ்ணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக கோவிலிலிருந்து ராமபிரான், சீதாதேவி, லெட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடன் தங்ககேடயத்திலும், விபீஷ்ணரும் தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து பகல் 2 மணிக்கு மேல் ராமபிரான் இலங்கை மன்னராக விபீஷ்ணருக்கு பரிவட்டம் கட்டி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் விபீஷ்ணருக்கும் சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

வீதிஉலா

இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 12.30 மணிக்கு கோவிலில் உள்ள ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவில் ரத வீதிகளை சுற்றி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



Next Story