சாரதா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சாரதா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலாளர் சத்யானந்த சுவாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா ஆசியுரை வழங்கினார். கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் பொக்கிஷதார் அபேதானந்தா சுவாமி, செயலாளர் சத்யானந்தா சுவாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 592 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். இதில் 29 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர். தொடர்ந்து மாணவிகள் பட்டமளிப்பு விழா உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் கல்வியியல் கல்லூரி செயலாளர் யதீஸ்வரி துர்கா பிரியா அம்பா, பள்ளி செயலாளர் யதீஸ்வரி தவப்பிரியா அம்பா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியை பார்வதி தேவி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாணவியர் பேரவை தலைவி அனுஷா தொகுத்து வழங்கினார்.