அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா


அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா
x

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்சி

அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி மண்டல அலுவலகத்தில் உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை தாங்கி பரிசுகளையும், சிறப்பு விருந்தினராக திருச்சி பாரத மிகுமின் நிறுவன நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார். இதில் திருச்சி, அரியலூர், திருக்குவளை மற்றும் பட்டுக்கோட்டை வளாகத்தின் மொத்தம் 1308 இளங்கலை மற்றும் 81 முதுகலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். மேலும் துறை ரீதியாக முதலிடம் பெற்ற 20 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற 18 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள், மாணவ-மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story