திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா
x

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்கள் வழங்குகிறார்.

வேலூர்

பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று (திங்கட்கிழமை) 17-வது பட்டமளிப்பு விழா காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி வி.கே.சிங், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

பட்டமளிப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நேற்று விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். காட்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம், பதிவாளர் விஜயராகவன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பட்டமளிப்பு விழாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருவதால் வேலூர் மாவட்ட எல்லை பகுதியான திருவலத்திலிருந்து தமிழ்நாடு- ஆந்திர எல்லைப் பகுதியான முத்தரசி குப்பம் செக்போஸ்ட் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு பின்னரே தமிழ்நாட்டு எல்லைக்குள் காவல்துறையினர் அனுமதிக்கின்றனர்.


Next Story