குமரி மாவட்ட 21 வன கிராமங்களில் கிராம சபை; கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் ஆலோசனை
குமரி மாவட்ட 21 வன கிராமங்களில் கிராம சபை அமைப்பது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
குமரி மாவட்ட 21 வன கிராமங்களில் கிராம சபை அமைப்பது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
ஆலோசனை
குமரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் 2006-ன் படி 21 வன கிராமங்களுக்கு கிராம சபை மற்றும் வன உரிமை குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மனாபபுரம் தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) நாகப்பன், கோட்ட வன உரிமை குழு உறுப்பினர் சுரேஷ்காணி, மாவட்ட வன உரிமை குழு உறுப்பினர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story