கிராமசபை கூட்டம்
தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி அந்ததந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் அந்தந்த ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வடசேரி ஊராட்சியில் தலைவர் சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் தீர்மானத்தை வாசித்தார்.
தோகைமலை ஊராட்சியில் தலைவர் தனமாலினி கந்தசாமி, பொருந்தலூர் ஊராட்சியில் தலைவர் சத்யா ராமச்சந்திரன், பாதிரிப்பட்டி ஊராட்சியில் தலைவர் பாபாத்தி சக்திவேல், பில்லூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி பழனி, ஆர்.டி.மலை ஊராட்சியில் தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி, கூடலூர் ஊராட்சியில் தலைவர் அடைக்கலம், புத்தூர் ஊராட்சியில் தலைவர் தணிகாசலம், கழுகூர் ஊராட்சியில் தலைவர் முத்துசாமி, ஆலத்தூர் ஊராட்சியில் தலைவர் ஜெயபால், சின்னையம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பழனிச்சாமி, நாகனூர் ஊராட்சியில் தலைவர் லதா ராஜா ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர்கள் தீர்மானங்கள் வாசித்தனர்.
கூட்டங்களை ஒன்றிய ஆணையர் விஜயகுமார் மேற்பார்வை செய்தார். இதில், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.