சுதந்திர தினத்தில் 306 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி 306 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு, தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்வது முக்கிய கடமை ஆகும். மேலும் கிராமசபை கூட்டத்தில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்று, அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பெதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.