கண்டமானடியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது


கண்டமானடியில் கிராம சபை கூட்டம்    கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது
x

கண்டமானடியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் கண்டமானடி ஊராட்சியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி கண்டமானடி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், புதிய திட்டங்களை தேர்வு செய்யவும் இதுபோன்ற கிராம சபை கூட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் பணிகள் நடைபெறும்போது பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

தேசிய கொடியேற்றினார்

முன்னதாக கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டங்கி ஊராட்சியில் அமிர்த சரோவர் திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.6.75 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் குளம் அமைத்து நீர்நிலை ஆதாரங்களை உயர்த்தும் வண்ணம் அமைக்கப்பட்ட குளத்தை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், கோலியனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், கண்டமானடி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


Next Story