157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.

கரூர்

உள்ளாட்சிகள் தினம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினம் அன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவிக்கையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினம் அன்று தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பிப்பது, கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவிப்பது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்து கிராம சவை கூட்டம் நடைபெற உள்ளது.

கலந்து கொள்ள வேண்டும்

மேலும் வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது, மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குவது, பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழில்கள், மக்கள் நிலை ஆய்வு (மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் விடுபட்ட, புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்ப்பது) ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினம் அன்று கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story