தொழிலாளர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


தொழிலாளர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

தொழிலாளர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் வருகிற 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story