54 இடங்களில் கிராம சபை கூட்டம்


54 இடங்களில் கிராம சபை கூட்டம்
x

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்து அலுவல கங்களில் நடைபெற்ற குடியரசுதினவிழாவை யொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்து அலுவல கங்களில் நடைபெற்ற குடியரசுதினவிழாவை யொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டம்

குடியரசு தினவிழாவை யொட்டி சிவகாசி பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு அசோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பஞ்சாயத்து பொறுப்பு தலைவர் ராஜபாளையம் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் லோகேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுடர்வள்ளி சசிக்குமார், கலைமணி, முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் லட்சுமண பெருமாள் செய்திருந்தார்.

சித்துராஜபுரம் பஞ்சாயத்தில் நடை பெற்ற கிராமசபை கூட்டத்துக்கு தலைவர் லீலாவதி சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் அருள் செய்திருந்தார். நாரணாபுரத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனையூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொறுப்பு தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார்.

விஸ்வநத்தம்

விஸ்வநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகேந்திரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் செல்வம் செய்திருந்தார். அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் கவிதாபாண்டியராஜ் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் புஷ்பவேணி, செயலர் பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் கருப்பசாமி, துணைத்தலைவர் மாரியப்பன், பஞ்சாயத்து செயலர் கனகமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆனைக்குட்டம், மேலாமத்தூர், சுக்கிரவார்பட்டி, சாமிநத்தம், பூலாவூரணி, மாரனேரி, ஆலமரத்துப்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, செங்கமலப்பட்டி உள்ளிட்ட 54 கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராம வளர்ச்சிக்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story