430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்


430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
x

430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதிசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்ட பணிகள் தேர்வு, பயனாளிகள் தேர்வு குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற, கிராம சபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story