அனைத்து ஊராட்சிகளிலும் 1-ந் தேதி கிராம சபை கூட்டம் -கலெக்டர் அனிஷ் சேகர் தகவல்


அனைத்து ஊராட்சிகளிலும் 1-ந் தேதி கிராம சபை கூட்டம் -கலெக்டர் அனிஷ் சேகர் தகவல்
x

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ந் தேதி, கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

மதுரை

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ந் தேதி, கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ந் தேதி, கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ந் தேதி, கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தணிக்கை

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற கூட்ட பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

அரசு திட்டங்கள்

இந்த கிராம சபை கூட்டங்களில் அந்த ஊராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story