காரியாபட்டி, சிவகாசி பகுதிகளில் கிராம சபை கூட்டம்


காரியாபட்டி, சிவகாசி பகுதிகளில் கிராம சபை கூட்டம்
x

காரியாபட்டி, சிவகாசி ஆகிய பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி, சிவகாசி ஆகிய பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குரண்டி

காரியாபட்டி அருகே குரண்டி ஊராட்சி மன்ற கிராமசபை கூட்டம் தலைவர் சிவசக்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கல், மழைக்காலம் வர இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கீழக்கண்மாயை தூா்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பேச்சியம்மாள், வார்டு உறுப்பினர்கள், அரசு துறை அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

மேலாமத்தூர்

மேலாமத்தூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் விஜயாசின்னமருது தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சுந்தரமூர்த்தி செய்திருந்தார். பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம சபை நடந்த பகுதியில் பஞ்சாயத்து தலைவர் உசிலை செல்வம் 50 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் லட்சுமணபெருமாள் செய்திருந்தார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு தலைவர் பாண்டியம்மாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அதிவீரன்பட்டி செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை கண்ணன் செய்திருந்தார்.

சாமிநத்தம்

சாமிநத்தம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு மகாலட்சுமி பாலகுருசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முருகேஸ்வரி சேதுராஜ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், தாசில்தார் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் செந்தில்வேல் செய்திருந்தார். ஆனைக்குட்டம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்துதலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் ராமலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் முத்துப்பாண்டி செய்திருந்தார். பூலாவூரணியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பாண்டி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்ட ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் சங்கிலிதாஸ் செய்திருந்தார்.


Next Story