ஊராட்சிகளில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்


ஊராட்சிகளில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளைமறுநாள் நடக்கிறது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளைமறுநாள் நடக்கிறது.

கிராம சபை கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்திட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்ளாட்சிகள் தினத்தன்று நடக்கிறது.

அன்றைய தினம் காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

மண்டல அலுவலர்கள் நியமனம்

இதில் உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு மேற்பார்வையாளர்களும் கண்காணிக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story