683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 15-ந் தேதி நடக்கிறது.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 683 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக, ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே கிராம பொதுமக்கள் மேற்படி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story