விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள்


விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது என செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுகிறது என செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

கூடுதல் வருமானம்

தமிழக அரசு உளுந்து பயிரிடுவதற்கு நில பரப்பளவை அதிகப்படுத்தி வருகிறது. குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டவும், உளுந்து பயிர் வகைகளை சாகுபடி செய்வது அவசியமாகும்.

ஆண்டு தோறும் சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

மானிய விலையில் உளுந்து விதைகள்

இந்த நிலையில் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர், திருக்கடையூர், பொறையாறு, திருவிளையாட்டம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் உளுந்து விதை, உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விதை மற்றும் உயிர் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் நகல், நில ஆவண நகல்களை கொடுத்து உளுந்து விதை மற்றும் உயிர் உரங்களை 50 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story