விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகளை வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டாரத்தில் புங்கனூர், காவனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 20 பேருக்கு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் உளுந்து விதைகளை வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், நெல்லுக்கு பின் பயிறு வகை சாகுபடி திட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பிற்கு 8 கிலோ உளுந்து விதை மானிய விலையில் வழங்கப்படுகிறது. எனவே, வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம் என்றார்.
அப்போது வேளாண்மை அலுவலர் திலகவதி, வேளாண்மை ஊழியா் சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story