கிராம வங்கி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி


கிராம வங்கி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
x

கிராம வங்கி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்


தமிழ்நாடு கிராம வங்கியின் விருதுநகர் மண்டல அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் செயல்படும் 37 வங்கி கிளைகளின் சார்பில் ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக விருதுநகர் வங்கி கிளையிலிருந்து மண்டல மேலாளர் கந்தசாமி தலைமையில் பேரணி புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் வங்கி கிளையில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் வங்கி வாடிக்கையாளர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பான டிஜிட்டல் வங்கி புகார் அனைத்தையும் நடுவர் மூலம் தீர்த்துக் கொள்வது. டிஜிட்டல் வங்கி சேவையை பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, அட்டல் பென்சன் திட்டம், முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பேரணியில் கொண்டு சென்றனர்.


Next Story