கிராம நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்


கிராம நிர்வாக அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
x

வந்தவாசியில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

வந்தவாசி

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வந்தவாசியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் என்.சுரேஷ் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும், நகரை ஒட்டியுள்ள வருவாய் கிராமங்களை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் டி.கணேஷ், வட்டத் தலைவர் செயலாளர் எஸ்.சிவசங்கர், துணைத்தலைவர் டி.ஈ.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story