மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
x

மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

கிராம சபா கூட்டம்

மெட்ராத்தி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பி.எஸ்.தங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் பள்ளிக் குழந்தைகள் இடைநிறுத்தம் தவிர்த்தல் உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டுறவு சார்பதிவாளர் மாரிமுத்து, வங்கி செயலர் சாமியப்பன், தோட்டக்கலை உதவி அலுவலர் காவியா, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரீத்தி, ராஜ், ராமகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பற்றாளராக சிவா கலந்துகொண்டார்.முடிவில் ஊராட்சி செயலர் ம.தங்கவேல் நன்றி கூறினார்.

இதுபோல துங்காவி ஊராட்சி மலையாண்டிபட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் உமாதேவி காளீஸ்வரன் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட 23 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர் சிவகுருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாதிக் பாட்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வடுகபாளையம்

வடுகபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.குடிமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் உமாதேவி முருகவேல், சோமவாரப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் விமலா சவுந்தரராஜன் தலைமை தாங்கினர்.

-----------------

Next Story