முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு
x

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்று பயணமாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக திருவண்ணாமலைக்கு வருகை தந்த அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியான கீழ்பென்னாத்தூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது நையாண்டி இசை, தாரை தப்பட்டை, உடல் இசை, பொய்கால் குதிரை, ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் மூலம் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நினைவு பரிசு வழங்கினார்.

மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கீழ்பென்னாத்தூரில் இருந்து திருவண்ணாமலை வரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது சாலை நெடுக்கிலும் கட்சியினர் நீண்ட வரிசையில் நின்று கட்சி கொடியையும், கட்சி பதாகையையும் ஏந்தியபடி நின்றனர்.

முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலெக்டர் முருகேஷ் பூங்கொத்து கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றார். மேலும் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரி வரவேற்பு அளித்தனர்.

முதல்- அமைச்சர் சென்ற வழியெங்கும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல்- அமைச்சர் வருகையால் திருவண்ணாமலை விழா கோலம் பூண்டு காணப்பட்டது.


Related Tags :
Next Story