தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 75). பரமசிவம் இறந்துவிட்டதால் பரமேஸ்வரி தனது மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தும் பயனில்லை. இதனால் மனவேதனை அடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று தஞ்சை வடவாறு கரைக்கு சென்றார்.
அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தான் கொண்டு சென்ற கேனில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். வலியால் துடித்த அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதையடுத்து பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.