ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்


ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்
x
தினத்தந்தி 15 April 2023 12:45 AM IST (Updated: 15 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்க பூபதி பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். இயக்குனர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரத்தினாகணபதி வரவேற்றார். இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் தாத்தா-பாட்டிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சுமதி, சித்ரா, ஜெயசித்ரா, மனோகரி, சுகுணா, இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story