ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு பணிக்கொடை


ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு பணிக்கொடை
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

ஓய்வு பெற்ற டேன்டீ தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தோட்ட தொழிலாளர்கள்

கூடலூரில் ஏ.ஐ.டி.யு.சி. தோட்ட தொழிலாளர் சங்க கூட்டம் தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் போஜராஜ், செயலாளர் முகமது கனி, பொருளாளர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரியா கமிட்டி செயலாளர் பெனடிக், தோட்ட கமிட்டி பொறுப்பாளர்கள் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி காலை 11 மணிக்கு டேன்டீ தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட டேன்டீ நிறுவனத்துக்கும் தெரியப்படுத்திய நிலையிலும் இதுவரை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, டேன்டீ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த அறிவிப்பை நிர்வாகத்துக்கு அனுப்பி வைப்பது, ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், வால்பாறையில் இருந்தும் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

பணிக்கொடை

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பணி ஓய்வு தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை காலி செய்து நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் தான் பணிக்கொடை வழங்க முடியும் என்ற நிர்வாகத்தின் முடிவை எதிர்ப்பதுடன், எந்தவித நிபந்தனையும் இன்றி பணிக்கொடை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தரமான அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று குடியிருப்பை தமிழக அரசு மூலம் நிர்வாகம் கட்டித் தரும் பட்சத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பை காலி செய்து நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள்.

வனவிலங்குகள் பாதுகாப்பு, நிதி இழப்பு, தொழிலாளர் பற்றாக்குறை, தோட்டங்களை பராமரிக்க இயலாமை போன்ற பல்வேறு காரணங்களை கூறி டேன்டீ தேயிலை தோட்டத்தை சிறு,சிறு பகுதிகளாக வனத்துறைக்கு ஒப்படைப்பதை கண்டிப்பதுடன், நிறுவனத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க கூடாது. தொடர்ந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story