புதைகுழியான சாலை


புதைகுழியான சாலை
x

புதைகுழியான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே சாலையோரம் புதைகுழி போன்ற மிகப் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. வாகனங்கள் நேருக்கு நேர் வந்து, மாறி செல்லும்போது சறுக்கி விழும் அபாயம் உள்ளது. இருவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து செல்கிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story