பெரிய மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா
ஆயக்காரன்புலம் பெரிய மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
ஆயக்காரன்புலம் நல்லான்குத்தகை பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று. விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள்நீராட்டு விழா நேற்று மாலை நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் ்வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுஅம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story