பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை


பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் கோவிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது

தென்காசி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந் தேதி தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை 10-30 மணிக்கு சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10-40 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு மேல் ரிஷப வாகன காட்சியும், இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடக்கின்றன.


Next Story