பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17.76 விலை நிர்ணயம்-தேயிலை வாரிய இயக்குனர் தகவல்


பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17.76 விலை நிர்ணயம்-தேயிலை வாரிய இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17.76 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று தேயிலை வாரிய இயக்குனர் தெரிவித்தார்.

நீலகிரி

குன்னூர்

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.17.76 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று தேயிலை வாரிய இயக்குனர் தெரிவித்தார்.

ரூ.17.76 நிர்ணயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயமே பிரதான விவசாயமாக இருந்து வருகிறது. தேயிலை எஸ்டேட்டுகள் மட்டுமின்றி சிறு விவசாயிகளும் தேயிலை விவசாயத்தில் ஈடுட்டு வருகின்றனர். இதன்படி மாவட்டத்தில் 65 ஆயிரம் தேயிலை சிறு விவசாயிகள் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது தேயிலை சிறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலைக்கு கட்டுபடியான விலை கிடைப்பது இல்லை என்றும் மத்திய அரசு பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி மத்திய அரசின் தேயிலை வாரியம் மூலம் மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய மாவட்டத்தில் விலை நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாதந்தோறும் பச்சை தேயிலைக்கு சராசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. இதன்படி கடந்த டிசம்பர் மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாய் 76 பைசா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

இதுகுறித்து தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் எம்.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- 2021-ம் ஆண்டின்தேயிலை (சந்தைப்படுத்துதல்) கட்டுபாட்டு ஆணையின்படி பச்சை தேயிலையின் மாவட்ட சராசரி விலை மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த டிசம்பர் மாத மாவட்ட சராசரி விலையாக பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 17ரூபாய் 76 பைசா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேயிலை ஏலத்தில் வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த சி.டி.சி தேயிலை தூளின் விற்பனை விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சராசரி விலையை மாவட்டத்திலுள்ள அனைத்து வாங்கும் தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை சிறு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதனை தேயிலை வாரிய கள அதிகாரிகள் தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை வளர்ச்சி உதவி இயக்குனர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story