திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து அவரவர்க்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்திலும், 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும்.

உரிய நடவடிக்கை

அன்றையதினம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்பட்டு குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க தக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story