சாலையில் வரையப்பட்ட செஸ் அட்டை போன்ற கட்டங்கள்
சாலையில் செஸ் அட்டை போன்ற கட்டங்கள் வரையப்பட்டன.
அரியலூர்
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரியலூரில் மார்க்கெட் தெருவில் உள்ள பஸ் நிலையம் நுழைவு வாயில் சாலையில் கருப்பு, வெள்ளை வண்ணங்களால் செஸ் அட்டை போன்று கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்பவர்கள் அதனை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story