தமிழ்நாடு தபால் வட்டம் சார்பில் வருகிற 27-ந் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்-கண்காணிப்பாளர் தகவல்


தமிழ்நாடு தபால் வட்டம் சார்பில் வருகிற 27-ந் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்-கண்காணிப்பாளர் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு தபால் வட்டம் சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது என்று தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குறைதீர் கூட்டம்

தமிழ்நாடு தபால் வட்டம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதி பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் தபால் வட்ட குறைதீர்க்கும் கூட்ட உறுப்பினர் ஆகியோர் தபால்துறை வாடிக்கையாளர்களின் குறைகளை தனிப்பட்ட முறையில் கேட்டு நிவர்த்தி செய்வார்கள்.

எனவே வாடிக்கையாளர்கள் தபால் சேவையில் குறைகள் தொடர்பான தங்கள் மனுக்களை விஜயலஷ்மி, உதவி இயக்குனர் (எஸ்.பி. அண்ட் எப்.எஸ்.), முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், தமிழ்நாடு சர்க்கிள், சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வருகிற 16-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை மின்னஞ்சல் மூலம் pg.tn@indiapost.gov.in-க்கு டேக் அதாலத் என்ற தலைப்பில் அனுப்பலாம்.

முழு விவரங்கள்

வாடிக்கையாளர்கள் மணியார்டர், பதிவு அஞ்சல், விரைவு தபால், காப்பீடு தொடர்பான குறைகளுக்கு ஆர்டிகிள் எண், தேதி மற்றும் புக்கிங் அலுவலகம், அனுப்புனர் மற்றும் பெறுனர், முழு முகவரி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

புகார்கள் சேமிப்பு திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு பற்றி இருப்பின் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர், மீட்டெடுப்பு விவரங்கள் மற்றும் தபால் துறையின் ஏதேனும் குறிப்பு இருந்தால் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story