போலீஸ் குறைதீர்ப்பு முகாம்
போலீஸ் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று குறைதீர்ப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் நேரடியாக வழங்கப்பட்ட 27 மனுக்களுடன் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்ட போலீஸ்துறை தொடர்பான மனுக்கள் 25 உள்ளிட்ட 52 மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் சொத்துப்பிரச்சினை, குடும்பத்தகராறு, வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோர்ட்டு மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. இந்த முகாமில் கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், வெள்ளைத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story