போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 10 Aug 2023 1:45 AM IST (Updated: 10 Aug 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். அதில் நிலப்பிரச்சினை, பணம் கொடுக்கல்-வாங்கல், குடும்ப பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 25 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணை சூப்பிரண்டுகள் மூலம் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.


Next Story