முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்


முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம்
x

எம்.ஆர்.சி. சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவ வீரர்களுக்கு 47 வாரங்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு மாநிலங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இந்தநிலையில் எம்.ஆர்.சி. ராணுவ மையம் சார்பில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்ட்டன்ட் பிரிகேடியர் யாதவ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.‌ அதில் ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சி, களரி, தோடர் இன மக்களின் நடனம், படுகர் இன மக்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் முன்னாள் படை வீரர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.


Next Story