மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் உதவி கலெக்டர் தலைமையில் நடக்கிறது. எனவே சீர்காழி கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாளஅட்டை அனைத்து பக்கங்களின் நகல், மருத்துவச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகிய நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய புகைப்படம் ஒன்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story