நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்-நாளை நடக்கிறது


நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்-நாளை நடக்கிறது
x

நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.

நாமக்கல்

நாமக்கல்:

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, செல்போன் எண் பதிவு, பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கைகளை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளவும், பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் 8 இடங்களில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

அதன்படி நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

கொரோனா அறிவுரைகள்

எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது வினியோக திட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த குறைதீர்க்கும் முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story