கரூரில், குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடைபெற்றது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 461 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 77 மனுக்கள் பெறப்பட்டது. 25 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 83 ஆயிரத்து 165 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், திட்ட இயக்குனர்கள் வாணிஈஸ்வரி, சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, தனித்துணை கலெக்டர் சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி, அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடைபாதை வேண்டும்
கூட்டத்தில் நஞ்சை புகழூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- தவுட்டுப்பாளையம் கிராமத்தில் தற்போது தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைைய அக்ரஹாரம், புகழூர், தவுட்டுப்பாளையம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் கட்டிபாளையம் திருக்காடுதுறையை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது நெடுஞ்சாலை பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக சிறியதாக நடைபாதை அமைத்து தர வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.