ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் வியாழக்கிழமை நடக்கிறது. அதன்படி இந்த மாத கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சுபா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
எனவே தூத்துக்குடி கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்ட விவசாயிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story