குறைதீர்க்கும் கூட்டம்


குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து 18 கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சாராயம், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை நேரடியாக தெரிவிக்க 8428103040 என்ற தொலைபேசி எண் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


Next Story