சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், முப்படைவீரா் வாரியக்குழு கூட்டம், மாவட்ட முன்னாள் படைவீரர் மையக்குழு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. 50-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் சிறார்களின் கல்வி அறிவு மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை மற்றும் திருமண மானியம் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.70,000-க்கான நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.