போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மொத்தம் 30 பேர் கலந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கமிஷனர் கூறினார். இதில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அங்கே ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story