மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
இவ்வாறு வந்த 265 மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடி தீர்வு காணவும், மனு அளித்த பொதுமக்களுக்கு உரிய பதில் அளிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மாரிச்செல்வி உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story