போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொலை மிரட்டல், சொத்து தகராறு, அடிதடி, நிலத்தகராறு, பண மோசடி, நம்ப வைத்து ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து 39 பேர் மனு அளித்தனர்.
மனுவை நேரடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அந்தந்த பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
மனுக்களாக வழங்கலாம்
மாதந்தோறும் சட்டம், ஒழுங்கு தொடர்பான கூட்டங்கள் நடைபெ றும்போது குற்றச்சம்பவங்கள் குறித்து மட்டுமே பேசப்படுகிறது. இதேபோல் மற்ற பிரசிசினைகளான அடிதடி, வரதட்சணை சித்ரவதை, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும், வழக்கு நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.
மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களோடு புதன்கிழமைகளில் பொதுமக்கள் தரும் மனுக்களுடன் குறைகளை மனுக்களாக எழுதி நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.