மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவரவருக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளித்திட கேட்டு கொள்ளப்படுகிறது.

அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீதான உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பராமரிப்பு உதவித்தொகை

மேலும் உதவி உபகரணங்கள், கடன் உதவி, பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின் அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story