மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம்
x

கலசபாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது.

திருவண்ணாமலை

ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் நடக்கிறது.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு பெற்று பயன் அடையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story