அரியலூரில் 16-ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூரில் 16-ந் தேதி நடக்கிறது.
அரியலூர்
அரியலூர் ராஜாஜி நகர் மருத்துவக்கல்லூரி எதிரே அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை மேற்பார்வை பொறியாளரிடம் அளித்து பயனடைந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story