மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்


மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும்  கூட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவ கிராம மக்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மீனவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் தங்களது மீனவ கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கவேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மீனவர்கள் கலெக்டரிடம் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதில் மீனவர்களிடம் இருந்து 62 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குளிர்பதன வசதி கொண்ட லாரி ஒன்றை சந்திரபாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு கலெக்டர் வழங்கினார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

தொடர்ந்து மீனவர் விபத்து குழு காப்புறுதி திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர் இறந்தமைக்கு காப்புறுதி நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் அவரது வாரிசுதாரரான அவரது தந்தை ஏழுமலை என்பவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆணையையும் வழங்கினார்.

இதில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், உதவி இயக்குனர் (மீன்வளம்) ராஜேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் (மீன்வளம்) ரவீந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story